டிராகன் திரைப்படம் வெளியான 16 நாட்களில் உலகளவில் 134 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவான இப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு, முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. விரைவில் 150 கோடி ரூபாய் வசூலை கடந்து சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.