Also Watch
Read this
Posted on: Jan 01, 2026 08:07 AM
By: Web Team
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, திமுக அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் சென்னை, ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்து, வாழ்த்துகளை பெற்றனர். துரைமுருகன், எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், எம்ஆர்கே பன்னீர்செல்வம், தா.மோ. அன்பரசன் உள்ளிட்ட அமைச்சர்களும், முதலமைச்சரை சந்தித்து புத்தகங்கள், சால்வை வழங்கி வாழ்த்து பெற்றனர். திமுக எம்பிக்கள் டிஆர்.பாலு, தமிழச்சி தங்கபாண்டியன், ஆ.ராசா, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்பட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் வாழ்த்து பெற்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved