news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news திமுக கூட்டணியில் தேமுதிக
tv

Also Watch

tv

Read this

திமுக கூட்டணியில் தேமுதிக

சென்னை

97

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

அதிமுக கூட்டணியில் இருந்து வந்த தேமுதிக, கடைசி நேர திருப்பமாக, திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து தேமுதிக போட்டியிட உள்ளது.

முதன்முறையாக...
தேமுதிக தொடங்கிய காலத்தில் இருந்து, இதுவரை திமுக கூட்டணியில் இணையாத நிலையில், முதல் முறையாக இணைந்திருப்பது, திமுக கூட்டணிக்கு பலம் சேர்த்திருப்பதாகவே கூறப்படுகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில், தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, பொருளாளர் சுதீஷ் உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர்.

பொன்னாடை, பூங்கொத்து
இந்த பேச்சுவார்த்தையில், திமுக கூட்டணியில் தேமுதிக இணைவது உறுதி செய்யப்பட்டது. மு.க.ஸ்டாலினுக்கு, சுதீஷ் பொன்னாடை போர்த்தினார். கூட்டணியில் இணைந்த தேமுதிகவை வரவேற்கும் வகையில், பிரேமலதாவுக்கு முதல்வர் ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்பைத் தெரிவித்துள்ளார்.



பின்னணியில் எ.வ.வேலு?
அதிமுக கூட்டணியிலிருந்து, தேமுதிகவை, திமுக பக்கம் கொண்டு வந்திருக்கிறார் அமைச்சர் எ.வ.வேலு என்று கூறப்படுகிறது. கடந்த 2011ஆம் ஆண்டு முதல் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு வரும் தேமுதிக, தற்போது 2026ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்திருக்கிறது. இது இரு கட்சிகளுக்குமே சாதகமான நிலையை ஏற்படுத்தும் என்று, அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

முடிவை அறிவித்த தேமுதிக
ஏற்கனவே, கூட்டணிப் பேச்சுவார்த்தையை ஒரு பக்கம் அதிமுக, மறுபக்கம் திமுக என இரண்டு பக்கத்திலும், தேமுதிக பேசி வருவதாக சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில்தான், அதிமுக கூட்டணியிலிருந்த தேமுதிக இன்று பிப்ரவரி 19ஆம் தேதி, திமுகவில் இணைந்திருக்கிறது. தேமுதிகவை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற பாஜகவின் எண்ணம் நிறைவேறாமல் போய்விட்டது.


Related Link
திமுக கூட்டணியில் பிரேமலதா

திமுக கூட்டணியில் பிரேமலதா



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாரம்பரிய முறைப்படி நடந்த வெற்றிலை பிரி திருவிழா

0
4 hrs 18 mins agoshare
Mdu vetrilai








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved