இந்தியாவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும், ஆல்-ரவுண்டருமான ஸ்ரீதரன் ஸ்ரீராம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை பந்து வீச்சு பயிற்சியாளராக செயல்படுவார் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. முன்னதாக சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த பிராவோ, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஆலோசகராக இணைந்துள்ளதால், அவருக்கு பதிலாக ஸ்ரீதரன் ஸ்ரீராம் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.