கரூர் துயர சம்பவம் தொடர்பாக 2ஆவது முறையாக டெல்லியில் வைத்து ஐந்தரை மணி நேரமாக விஜய்யிடம் விசாரணை நடத்திய சிபிஐ, குற்றப்பத்திரிகையில் விஜய்யின் பெயரை சேர்க்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி த.வெ.க.வினரை அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது. முதல் நாள் விசாரணையில் சாட்சியாக விசாரிக்கப்பட்ட விஜய், 2ஆவது நாள் விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட நபராக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில், விஜய் WITNESSல் இருந்து SUSPECT ஆக மாற்றப்பட்டது ஏன்? நடந்தது என்ன? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. இரண்டாவது முறை விசாரணைசிபிஐ வளையத்தில் இருக்கும் விஜய்க்கு, முதல் நாள் விசாரணை சுமூகமாக முடிந்தது போல 2ஆம் நாள் விசாரணை சுமூகமாக இல்லை என்பதே டெல்லி வட்டாரத்தில் இருந்து கிடைக்கும் தகவலாக இருக்கிறது. கரூரில் த.வெ.க. பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கனவே த.வெ.க. முக்கிய நிர்வாகிகளிடம் விசாரணை நடத்திய சிபிஐ, கடந்த 12ஆம் தேதி விஜய்க்கு சம்மன் அனுப்பியிருந்தது. சிபிஐ சம்மனை ஏற்று விசாரணைக்கு ஆஜரான விஜய்யிடம் நான்கரை மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. முதல் நாள் விசாரணை முடிந்து பொங்கல் பண்டிகைக்காக மறுநாள் விசாரணைக்கு விலக்கு கேட்டிருந்த விஜய், 19ஆம் தேதி திங்கட்கிழமை மீண்டும் டெல்லிக்கு சென்று ஆஜரானார். வழக்கம் போல விஜய் ஆஜராவதை ஒட்டி சிபிஐ தலைமை அலுவலகம் டெல்லி போலீசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.5 மணி நேரத்திற்கு மேலாக விசாரணைகாலை பத்தரை மணியளவில் விசாரணைக்கு ஆஜரான விஜய்யிடம் 5 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடைபெற்றது. விசாரணையில், விஜய்யிடம் சிபிஐ அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பியதாக சொல்லப்படுகிறது. முக்கியமாக, கடந்த வாரம் விஜய் அளித்த பதில்களை வைத்தும், ஏற்கனவே சாட்சியங்கள் முன் வைத்த ஆதாரங்கள் அடிப்படையிலும் விஜய்யிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில், கரூர் பிரச்சார கூட்டத்திற்கு அறிவித்த நேரத்தை விட 7 மணி நேரம் தாமதமாக வந்தது ஏன்? என்ன காரணம் என விஜய்யிடம் கேள்வி எழுப்பியிருக்கிறது சிபிஐ. கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட போதும், பிரச்சாரத்தை நிறுத்தாமல் தொடர்ந்தது ஏன் என கேள்வி எழுப்பிய சிபிஐ, கூட்ட நெரிசலை உணர்ந்தீர்களா? இல்லையா? உணர்ந்தீர்கள் என்றால் ஏன் பிரச்சாரத்தை நிறுத்தவில்லை என வினா எழுப்பியதாக சொல்லப்படுகிறது. எப்போது பேச்சை முடித்தீர்கள்? எப்போது சம்பவ இடத்தில் இருந்து புறப்பட்டீர்கள்? என்றெல்லாம் கேள்வி எழுப்பிய சிபிஐ, பிரச்சார வேனின் மீது ஏறி நின்று பார்த்தாலே நெரிசலை கணித்திருக்க முடியுமே? நீங்கள் கணிக்கவில்லையா? தண்ணீர் பாட்டில்களை வீசும் போது கூட்ட நெரிசலை பார்க்கவில்லையா? போன்ற கேள்விகளை விஜய்யிடம் முன் வைத்ததாக கூறப்படுகிறது.கூட்டத்தை கட்டுப்படுத்த தவறியது காவல்துறைஅதோடு, ஏன் 7 மணி நேரம் தாமதம் ஆனது? என்ற கேள்விக்கு சாலையில் அதிகளவில் வளைவுகள் இருந்ததால் உரிய நேரத்திற்கு பிரச்சார இடத்திற்கு செல்ல முடியாமல் போனது என விஜய் கூற, அதற்கான ஆதாரங்களை சிபிஐ கோரியதாக தெரிகிறது. கூட்ட நெரிசல் ஏற்படுவதை தடுக்க ஏன் வாகனத்தை முன்கூட்டியே நிறுத்தவில்லை என்ற கேள்விக்கு, போலீஸ் அறிவுறுத்தலின் பேரில்தான் பிரச்சார வாகனம் இயக்கப்பட்டது எனவும், போலீஸ் அறிவுறுத்தி தான் கரூரில் இருந்து வெளியேறியதாகவும் விஜய் பதிலளித்ததாக கூறப்படுகிறது. கூட்டத்தை கட்டுப்படுத்த தவறியது காவல்துறை தான் என விஜய்யும் சிபிஐயிடம் குற்றச்சாட்டை முன் வைத்ததாக சொல்லப்படுகிறது. விஜய்யின் பெயர் SUSPECTஇதனிடையே, கரூர் விவகாரத்தில் விஜய்க்கு WITNESS என்ற அடிப்படையில் தான் சிபிஐ சம்மன் அனுப்பியது. அதாவது, சம்பவ இடத்தில் இருந்த சாட்சியம் என்ற அடிப்படையில் தான் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், 2ஆம் நாள் விசாரணைக்கு பிறகு விஜய்யின் பெயர் SUSPECT, அதாவது சந்தேகத்திற்குரிய நபர் என மாற்றப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்து உள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நபர் என மாற்றும் பட்சத்தில் விஜய்க்கு சிக்கல் வரவும் வாய்ப்பு இருப்பதாக சொல்கிறது டெல்லி வட்டாரம். விஜய்யிடம் 2 நாள் விசாரணை முடிந்த நிலையில், த.வெ.க.வில் அடுத்தபடியாக இன்னும் சிலருக்கும் சம்மன் வரலாம் என சொல்கிறார்கள். நிர்மல்குமார் விளக்கம்இதனிடையே, விசாரணை முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த த.வெ.க.வின் இணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார், விஜய்யிடம் விசாரணை நிறைவு பெற்றது எனவும், இனி எந்த சம்மனும் இல்லை என்பதால் விஜய் விசாரணைக்கு ஆஜராக வேண்டிய தேவையும் இல்லை என்றும் கூறினார். அதோடு, விஜய் பெயரை குற்றப்பத்திரிகையில் சேர்க்க திட்டம் எனவும்,விஜய்யை கைது செய்ய இருப்பதாகவும் வெளியாகும் தகவலில் உண்மை இல்லை என்றும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் நிர்மல்குமார் கூறி உள்ளார். இதையும் பாருங்கள் - "ஆளுநர் உரை நடைமுறையை நீக்க உறுதி"