news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ரிலீஸ், 94.31 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி
tv

Also Watch

tv

Read this

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ரிலீஸ், 94.31 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி

மாணவியரே முன்னிலை

1

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ரிலீஸ்

சுமார் 9 லட்சம் மாணவர்கள் எழுதிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. 94.31 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள்
தமிழகத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று மே 20ஆம் தேதி, வெளியானது. தேர்வு எழுதிய மாணவர்களில் 94.31 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வி அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்.

சுமார் 9 லட்சம் மாணவர்கள்
தமிழக பள்​ளிக் ​கல்வி பாடத் திட்​டத்​தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு - மார்ச் 2026, கடந்த மார்ச் 11ஆம் தேதி தொடங்​கி கடந்த ஏப்​ரல் 6ஆம் தேதி நிறைவடைந்தது. சுமார் 8.82 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கி, நிறைவடைந்தது. இந்நிலையில், இன்று மே 20ஆம் தேதி சென்னை - அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார். மொத்தம் 8.82 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதியதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார். இதில், 94.31 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

மாணவியரே முன்னிலை
வழக்கம்போலவே இந்த முறையும் தேர்ச்சி விகிதத்தில் மாணவர்களை காட்டிலும், மாணவியரே முன்னிலை பெற்றனர்.

* தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 92.15 சதவீதம்

* மாணவிகளின் எண்ணிக்கை 96.47 சதவீதம்

* மாணவர்களை விட 4.32 சதவீதம் அதிகமாக மாணவிகள் தேர்ச்சி

மாவட்ட அளவில் தேர்ச்சி
புதுக்கோட்டை - 97.57%
சிவகங்கை - 97.54%
தஞ்சாவூர் - 97.41%
திருச்சி - 97.31%
கன்னியாகுமரி - 97.30%
அரசு பள்ளிகளின் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 91.66 சதவீதம் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

பாட வாரியாக தேர்ச்சி
தமிழ் - 98.43%
ஆங்கிலம் - 99.44%
கணிதம் - 97.36%
அறிவியல் - 98%
சமூக அறிவியல் - 97.93%

நூற்றுக்கு நூறு மதிப்பெண்
தமிழ் - 34
ஆங்கிலம் - 93
கணிதம் - 3,194
அறிவியல் - 10,476
சமூக அறிவியல் - 3,336 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று அசத்தி உள்ளனர்.

Related Link
திட்டமிட்டபடியே ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறப்பு

திட்டமிட்டபடியே ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அதிமுகவுக்கு இடமளித்தால் ஆதரவு மறுபரிசீலனை - இடதுசாரிகள்

0
5 mins agoshare
அதிமுகவுக்கு இடமளித்தால் ஆதரவு மறுபரிசீலனை - இடதுசாரிகள்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved