இந்தியாவின் எல்லையில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே உலகின் மிகப்பெரிய அணையைக் கட்ட சீனா முடிவு செய்துள்ளது. 11 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் திபெத்தில் கட்டப்படும் இந்த அணையால் பிரம்மபுத்திரா நதி பாய்ந்தோடும் இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. அணையுடன் நீர் மின் நிலையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.