அமெரிக்காவில் ஃபோர்டு நிறுவனத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, அந்நிறுவனம் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்டும் உற்பத்தியை தொடங்க முன்வந்துள்ளது.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், போர்டு உடனான 30 ஆண்டு கால கூட்டணியை மீண்டும் புதுப்பிக்கும் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்ததாகவும், அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை பயன் உள்ளதாக அமைந்தது என தெரிவித்துள்ளார்.மேலும், அண்மைக்காலமாக மேற்கத்திய நாடுகளில் ஃபோர்டு நிறுவன கார்களில் விற்பனை கணிசமான அளவு குறைந்து வரும் நிலையில், இந்தியா சந்தையில் கவனம் செலுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.