சென்னை தலைமைச் செயலகத்தில், பல்வேறு மாவட்டங்களில், 12 தோழி விடுதிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின். திருச்சியில், 27 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான “பூஞ்சோலை” அரசினர் கூர்நோக்கு இல்லங்களுக்கும் அடிக்கல் நாட்டி வைத்தார். புற்றுநோய் தடுப்பு மற்றும் பராமரிப்பு திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்டுள்ள மருத்துவ ஊர்திகளை, முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டார். மேம்மோகிராபி, ECG கருவி, செமி-ஆட்டோ அனலைசர் உட்பட பல வசதிகளுடன் மகளிர் நல்வாழ்விற்காக, இவை வடிவமைக்கப்பட்டுள்ளது.