ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்து பேசினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், மாநில நிதித் தேவைகளை பூர்த்தி செய்ய மத்திய அரசின் உதவியை கோரியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதே போல் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரையும் சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசினார்.