இயக்குநர் பாலாவின் 25 ஆண்டு கால திரையுலக பயணத்தை கொண்டாடும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நடிகர் சூர்யா மற்றும் சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பாலாவுக்கு தங்க சங்கிலி அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். பாலா 25 மற்றும் வணங்கான் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது.