தருமபுரி & காவிரி உபரி நீர் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தருமபுரி & காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த கோரி பாமக சார்பில் நடைபெற்ற அரை நாள் கடையடைப்பு போராட்டம் வெற்றி பெற்றதாகவும், அனைவருக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார். மேலும் காவிரி உபரி நீர் திட்டத்தை உடனடியாக செயல்படுத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டு நிதியை ஒதுக்கீடு செய்து பணிகளை தொடங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.