மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா மகளிர் அணி வெற்றி பெற்றது. இலங்கையின் கொழும்பில் நடைபெற்ற 9ஆவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 221 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன் மூலம் 36.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 114 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.