தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பெயர் இடம் பெறாத மக்களால் புதிதாக ஆதார் கார்டு பெற விண்ணப்பிக்க முடியாது என அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்மா சர்மா எச்சரித்துள்ளார். கவுகாத்தியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆதார் அட்டைக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை மக்கள் தொகையை விட அதிகமாக உள்ளதாகவும், இது சந்தேகத்திற்குரிய குடிமக்கள் இருப்பதை காட்டுவதாகவும் கூறினார். ஆகவே, புதிய ஆதார் விண்ணப்பதாரர்கள் தங்கள் என்ஆர்சி விண்ணப்ப ரசீது எண்ணை ((ஏஆர்என்)) சமர்ப்பிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளதாக அசாம் முதல்வர் தெரிவித்தார்.