கர்நாடகாவில் நடைபெற்ற KSCA தொடரில் கோவா அணி சார்பில் களமிறங்கிய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் 9 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.கர்நாடகா அணிக்கு எதிரான போட்டியில் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டும், 2வது இன்னிங்சில் 4 விக்கெட்களையும் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.மொத்தமாக அர்ஜூன் 26.3 ஓவர்கள் போட்ட நிலையில் 87 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.