திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவத்தையொட்டி கோவில் தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. 9ம் நாள் நிகழ்வாக உற்சவ மூர்த்திகளும் சக்கரத்தாழ்வாரும் ஊர்வலமாக வராக சுவாமி கோவிலுக்கு வருகை தர அங்கு அவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் திருமஞ்சனம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.