பஹ்ரைன் சர்வதேச விமான கண்காட்சியில் இந்திய போர் விமானங்கள் பங்கேற்று வான் சாகசத்தில் ஈடுபட்டு அசத்த உள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கும் பஹ்ரைனுக்கும் இடையிலான நட்பு மற்றும் கலாச்சார உறவுகளின் பிணைப்பைக் கொண்டாடி வலுப்படுத்தும் வகையில் சகிர் விமான தளத்தில் நடைபெறவுள்ள பஹ்ரைன் சர்வதேச விமான கண்காட்சியில் இந்திய போர் விமானங்கள் பங்கேற்க உள்ளதாகவும் அதன்படி இந்திய விமானப்படையில் சாரங் ஹெலிகாப்டர் குழு தனது அசாத்திய வான் சாகசத்தால் பார்வையாளர்களை கவர்ந்திழுக்க போவது உறுதி எனவும் இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.