Also Watch
Read this
Posted on: Jan 02, 2026 12:04 PM
By: Web Team
சமவேலைக்கு சம ஊதியம் கோரி, போராடிய இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டதற்கு, பாமக தலைவர் அன்புமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நீதி கேட்டு போராடும் ஆசிரியர்கள் மீது, திமுக அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ள அவர், ஆசிரியர்களை தாக்கிய காவல்துறையினர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். கற்றறிந்த சமுதாயத்தை உருவாக்குவதற்கு முக்கியப் பங்களிக்கும் ஆசிரியர்களை போராடும் நிலைக்கு தள்ளும் எந்த அரசும் நீடித்த வரலாறு இல்லை என்றும், அதையும் கடந்து ஆசிரியர்கள் மீது தாக்குதல் உள்ளிட்ட அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்ட திமுகவுக்கு, அதற்கான பாடத்தை வரும் தேர்தலில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் புகட்டுவார்கள் என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved