news-tamil-logo

3/19/2026, 2:49:37 AM

news-tamil-logo
more
Advertisement
Home news வரலாறு காணாத இமாலய உச்சம்
tv

Also Watch

tv

Read this

வரலாறு காணாத இமாலய உச்சம்

ஒரு சவரன் தங்கம் ரூ.1,17,200

Posted on: Jan 23, 2026 06:32 AM

17

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னையில், இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் வரலாறு காணாத இமாலய உச்சம் தொட்டுள்ளது.

உச்சத்தில் தங்கம், வெள்ளி விலை
சென்னையில், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஜனவரி 23ஆம் தேதி, ஒரே நாளில், ஒரு சவரனுக்கு ரூ.3,600 என உயர்ந்தது. இதேபோல வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.20,000 உயர்ந்தது.

குறைந்தாலும் மீண்டும் உயரும் தங்கம்
உலகளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் இருக்கிறது. சர்​வ​தேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகிய​வற்​றின் அடிப்படை​யில், தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
கடந்த சில மாதங்​களாகவே தங்​கத்தின் விலை உயர்ந்து வரு​கிறது. சில நேரங்​களில் தங்கம் விலை குறைந்​து, மீண்​டும் உயர்​கிறது. தங்கத்தின் மீதான முதலீடு பாதுகாப்பான விஷயமாக, பொது மக்கள் மத்தியில் பார்க்கப்படுகிறது. இதனால், அனைத்து தரப்பு மக்களும் தங்கத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். தங்கத்தை அடமானம் வைத்து எளிதில் பணம் பெற முடிகிறது. தேவையான நேரத்தில் அதை விற்பனை செய்யவும் முடிகிறது.

ஒரு லட்சத்தை தாண்டியது
சமீபத்தில், ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு லட்சம் ரூபாயை தாண்டியது. அன்றைய நாள் முதல் தங்கம் விலை நாள்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருவது, வாடிக்கையாளரை கலக்கமடைய வைத்துள்ளது. 

இன்றைய விலை நிலவரம்
சென்​னை​யில், 22 காரட் ஆபரணத் தங்​கத்​தின் விலை இன்று, ஒரே நாளில் ஒரு கிராமுக்கு ரூ.450 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,650 ஆக விற்​பனை ஆனது. சவரனுக்கு ரூ.3,600 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,17,200 ஆக உள்ளது.
இதேபோல வெள்ளி விலையும் இன்று புதிய உச்சத்தை எட்டி உள்ளது. வெள்ளி ஒரு கிரா​முக்கு ரூ.20 உயர்ந்து, ரூ.360 மற்றும் பார் வெள்ளி ஒரு கிலோவுக்கு ரூ.20,000 உயர்ந்து, ரூ.3,60,000 ஆகவும் உள்ளது.


Related Link

"தமிழ்நாடு N.D.A. உடன் இருக்கிறது"

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
10 hrs 2 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved