news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news தி.மு.க. பேனரை அ.தி.மு.க.வினர் கிழித்ததாக குற்றச்சாட்டு
tv

Also Watch

tv

Read this

தி.மு.க. பேனரை அ.தி.மு.க.வினர் கிழித்ததாக குற்றச்சாட்டு

ஆத்தூர், சேலம்

21

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
slm Banner issue

அ.தி.மு.க.வினர் கிழித்ததாக குற்றச்சாட்டு :

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளது . இந்நிலையில் ஒன்றாவது வார்டு பகுதியில் அதிமுக சார்ந்த கோபி என்பவர் நகர மன்ற உறுப்பினராக உள்ளார்.

இந்நிலையில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அப்பகுதியில் திமுகவை சேர்ந்த 1-வது வார்டு செயலாளர் சக்கரவர்த்தி என்பவர் ஒன்றாவது வார்டு பகுதியில் கடந்த 2021 முதல் 2026 வரை திமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் வார்டு பகுதிக்கு நிறைவேற்றப்பட்டதாக செல்லியம்பாளையம் பிரதான சாலையில் நேற்று பிளக்ஸ் பேனர்
வைக்கப்பட்டது இந்நிலையில் இன்று காலை சென்று பார்க்கும் போது பேனர் முழுவதும் கிழிக்கப்பட்டது கண்டு திமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

செல்லியம்பாளையம் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட திமுகவினர் பேனர் கிழிப்பு சம்பவம் குறித்து ஆத்தூர் காவல்துணை கண்காணிப்பாளரிடம் திமுக சாதனை பேனரை அதிமுக சேர்ந்த நகர மன்ற உறுப்பினர் கோபி (அம்மா பேரவை செயலாளர்) மற்றும் ஆதரவாளர்கள் கிழித்ததாகவும்.

செல்லியம்பாளையம் பகுதியில் திமுகவினர் ஊருக்கு ஓட்டு கேட்க வந்தால் மற்றும் கட்சி சம்பந்தமாக எந்த வேலை செய்தாலும் அவர்களை கொலை செய்து விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகார் மனு வில் குறிப்பிட்டு உள்ளனர். அதிமுகவை சேர்ந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகரச் செயலாளர் வேல்முருகன் நகர மன்ற தலைவர் அலெக்ஸாண்டர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட திமுகவினர் புகார் மனு அளித்துள்ளனர்.

Related Link
பள்ளிவாசலில் விடிய விடிய நடந்த ரம்ஜான் நோன்பு சகர் விருந்து

பள்ளிவாசலில் விடிய விடிய நடந்த ரம்ஜான் நோன்பு சகர் விருந்து


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

4
15 hrs 39 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved