இயக்குநர் சுந்தர்.சி - வடிவேலு கூட்டணி 15 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்துள்ள படத்துக்கு, கேங்கர்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது.சுந்தர்.சி நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில், வடிவேலு ”கேங்கர்ஸ்” சிங்காரம் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.கத்ரீன் தெரசா, முனீஸ்காந்த், பக்ஸ், மைம் கோபி, ஹரிஷ் பேரடி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.90 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.சுந்தர்.சி - வடிவேலு கூட்டணியில் வெளியான பல்வேறு மெகா ஹிட் நகைச்சுவை காட்சிகளை போல், இந்த படத்தின் நகைச்சுவை காட்சிகளும் சூப்பர் ஹிட் ஆகும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.