கர்ப்பபை வாய் புற்றுநோய் பாதிப்பை தடுக்க HPV தடுப்பூசி திட்டத்தை தொடங்கிய தமிழக அரசு, அந்த திட்டத்திற்கு ஆபாச இன்ஸ்டா இன்ஃபுளூயன்ஸரை நடிக்க வைத்து விளம்பரம் எடுத்திருப்பது கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. பணம் கட்டும் சப்ஸ்கிரைபர்களுக்கு ஆபாச படம் காட்டி பிழைப்பு நடத்தி வரும் இன்ஃபுளூயன்ஸரை, பள்ளி மாணவிகள் முன்பாக நிற்க வைத்து விஞ்ஞானி போல கருத்து பேச வைத்திருப்பது நெட்டிசன்களை ஆத்திரத்தில் ஆழ்த்தி, பள்ளிக் கல்வித் துறையை வசை பாட வைத்துள்ளது. சமூக வலைதளத்திலேயே ஹாட் டாப்பிக்இன்ஸ்டாவில் ஆட்டம் போட்டு, சப்ஸ்கிரைபர்ஸ்களுக்கு தாராளம் காட்டிய அம்மணியை அழைத்து வந்து, பள்ளி மாணவிகளுக்கு விளம்பரம் எடுத்திருப்பது தான் தற்போது சமூக வலைதளத்திலேயே ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. விளம்பரத்தில் தான் சிக்கல் அதிகரித்து வரும் கர்ப்பபை வாய் புற்றுநோய் பாதிப்பை தடுக்கும் வகையில், 14 வயது பள்ளி மாணவிகளுக்கு HPV தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தனியாரில் HPV தடுப்பூசி செலுத்த சுமார் 28 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் என்ற நிலையில், இலவசமாகவே தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு பலன் அளிக்கும் இந்த திட்டம் நல்ல வரவேற்பை பெற்றாலும், திட்டத்திற்காக எடுத்த விளம்பரம் தான் தற்போது வீணாக சிக்கலில் சிக்கியுள்ளது. வேறு மாதிரியான சேவைகர்ப்ப பை வாய் புற்றுநோய் குறித்தும், HPV தடுப்பூசி செலுத்தும் திட்டம் குறித்தும் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எடுக்கப்பட்ட அந்த விளம்பரத்தில், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடும் இன்ஃபுளூயன்ஸரை நடிக்க வைத்திருப்பது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. ஷர்மிஸ் VLOGS என்ற பெயரில் இயங்கி வரும் அந்த PAGE-ல் நான்கரை லட்சம் சப்ஸ்கிரைபர்கள் இருக்கும் நிலையில், இன்ஸ்டாகிராமிலும் சுமார் ஒன்றரை லட்சம் பாலோயர்ஸ்கள் இருக்கிறார்கள். வழக்கமான இன்ஃபுளூயன்சர் போல சினிமா பாடலுக்கு நடனம் ஆடி, குத்தாட்டம் போட்டு ரீல்ஸ் போடுவதை தாண்டி, பணம் கட்டி சப்ஸ்கிரைப் செய்தவர்களுக்கு வேறு மாதிரியான சேவைகளும் வழங்கி வருகிறாராம். பள்ளிக் கல்வித் துறையை நோக்கி...பணம் கட்டி சந்தாதாரர்களாக ஆகும் வாடிக்கையாளர்களுக்கு ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் காட்டுவது என லட்சம் லட்சமாக சம்பாதித்து வருகிறாராம். அதே மாதிரி யூடியூபிலும் முக்கால்வாசி வீடியோக்கள் MEMBERS ONLY என போட்டு வைக்கப்பட்டுள்ளது. அங்கங்களை காட்டி கல்லா கட்டி வரும் நபரை வைத்து விழிப்புணர்வு விளம்பரம் எடுத்து பதிவிட்டு இருப்பது, பள்ளிக் கல்வித் துறையை நோக்கி பல கேள்விகளை எழுப்பியுள்ளது. விழிப்புணர்வு விளம்பரத்தையே...விழிப்புணர்வு விளம்பரத்தில் நடிக்க வைக்க வேற ஆளே இல்லையா? என நெட்டிசன்கள் பள்ளிக்கல்வித் துறையை நோக்கி கேள்வி எழுப்பி வருகின்றனர். HPV தடுப்பூசி குறித்து விளம்பரம் செய்ய எவ்வளவோ மருத்துவ வல்லுநர்கள், ஆசிரியர்கள் இருக்கும் போது அவர்களையெல்லாம் விட்டுவிட்டு சோஷியல் மீடியாவில் ரீச், லைக்ஸுக்கு வீடியோ போடும் பெண்ணை அழைத்து வந்து முன்னுதாரணமாக காட்டி விளம்பரம் எடுத்திருப்பது விமர்சிக்க வைத்துள்ளது. பள்ளி மாணவிகள் முன்பு நின்று பொறுப்புடன் பேச வேண்டிய இடத்தில் பொறுப்பே இல்லாமல் ஒரு ஆபாச இன்ஃபுளூயன்ஸரை வைத்து நடிக்க வைத்திருப்பது, அந்த விழிப்புணர்வு விளம்பரத்தையே கேலிக்குள்ளாக்கியிருக்கிறது. நிகழ்ச்சியால் கடும் விமர்சனம்ஏற்கனவே, பள்ளிகளில் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்க எவ்வளவோ சாதனையாளர்கள், சமூக ஆர்வலர்கள் இருக்கும் போது, பொழுது போக்காக இன்ஸ்டாவில் இன்புளூயன்சர்களை அழைத்து வந்து நிகழ்ச்சி நடத்துவதும் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது. அரசுப்பள்ளிகளிலேயே இன்புளூயன்சர்களை அழைத்து வந்து வாடிக்கையாகி வந்தது. குறிப்பாக, மகாவிஷ்ணு, மணி போன்றவர்களெல்லாம் EXPOSE ஆகி வாங்கிக் கட்டிக் கொண்டார்கள். நடவடிக்கை எடுக்க வேண்டும்ஆனால், இதையெல்லாம் கண்காணிக்க வேண்டிய பள்ளிக்கல்வித்துறை இன்னும் அலட்சியமாக செயல்பட்டு வருவது HPV தடுப்பூசி விழிப்புணர்வு விளம்பரம் மூலமே தெரியவருகிறது. ஆகையால், மாணவர்களை நல் வழிப்பாதையில் வழிநடத்த வேண்டிய பள்ளிக்கல்வித்துறை, மாணவர்களுக்கு இப்படி தவறான எண்ண ஓட்டங்களை தூண்டும் கையில் விளம்பரம் எடுப்பது எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதோடு, காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. Related Link அரசு கல்லூரியில் கூட்டு பாலியல் வன்கொடுமை