திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை ஸ்ரேயா சாமி தரிசனம் செய்தார். திருப்பதி கோயிலுக்கு சென்ற அவர், ஏழுமலையானை தரிசித்ததை தொடர்ந்து, அர்ச்சகர்கள் அவருக்கு பிரசாதங்கள் வழங்கி சிறப்பித்தனர். இதனையடுத்து, கோயிலுக்கு வெளியில் வந்த ஸ்ரேயாவை, பக்தர்கள் சூழ்ந்து கொண்டு செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.* நடிகை ரேகா ரதீஷ் கண்ணீர் மல்க வீடியோ வெளியீடு* யூடியூபர்கள் தன்னை பற்றி அவதூறு பரப்பி வருவதாக புகார்* படவாய்ப்புகள் இல்லாமல் தவிப்பதாக ரேகா ரதீஷ் பதிவுமலையாள நடிகை ரேகா ரதீஷ், யூடியூபர்களை கண்டித்து கண்ணீர் மல்க வெளியிட்டுள்ள வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. எக்ஸ் தளப்பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், சில மாதங்களாக பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வருவதாகவும், யூடியூபர்கள் சிலர் தன்னை பற்றி அவதூறு பரப்பிவருவதாக கூறியுள்ளார். தனக்கு ஏதேனும் நடந்தால் யூடியூபர்கள் தான் காரணம் என கூறியுள்ளார்.* இந்த ஆண்டு இறுதியில் "POCKET NOVEL" வெளியாகிறது* படத்தின் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா தகவல் * 7 ஆண்டுகளுக்கு பின் VJS-தியாகராஜன் குமாரராஜா கூட்டணி"POCKET NOVEL" திரைப்படத்திற்கான இசை கோர்ப்பு பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்து விட்டதாகவும், இந்த ஆண்டு இறுதியில் திரையில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா பேட்டி ஒன்றில் கூறினார். லீலை மற்றும் கொலைகாரன் திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த ஆண்ட்ரூ லூயிஸ் கதை மற்றும் திரைக்கதை பணிகளை மேற்கொள்வதாக அவர் கூறினார். சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்திற்கு பின் சுமார் 7 ஆண்டுகள் இடைவெளியில் விஜய் சேதுபதி -தியாகராஜன் குமாரராஜா கூட்டணியில் திரைப்படம் உருவாகிறது.* யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள கெணத்தோ காணோம்* பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட நடிகர் ஆர்யாசுரேஷ் சங்கையா இயக்கத்தில் யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள "கெணத்த காணோம்" திரைப்படத்தின் 1ST LOOK போஸ்டரை வெளியிட்ட நடிகர் ஆர்யா, திரைப்படம் வெற்றியடையை படக்குழுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். வறட்சியால் பாதிக்கப்பட்ட கிராமத்தில் கிணறு தோண்டும்போது, நீருக்கு பதில் டைனோசரின் புதைபடிமங்கள் கிடைக்கிறது. அப்போது நிகழும் பரபரப்பு சம்பவங்களின் அடிப்படையில் நகைச்சுவையாக திரைப்படம் உருவாகியுள்ளது. திரைப்படத்திற்கு நிவாஸ்.கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். Related Link சினிமாவிலிருந்து முழுமையான ஓய்வு?