ஆண்களுக்கான டி20 தரவரிசை பேட்ஸ்மேன்கள் பட்டியலில் அபிஷேக் சர்மா 2ம் இடத்திற்கு முன்னேறி உள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியாவின் அபிஷேக் சர்மா 829 புள்ளிகளுடன் 38 இடங்கள் முன்னேறி 2வது இடத்திற்கு முன்னேறியுளள்ளார். இந்த பட்டியலில் இந்தியாவின் திலக்வர்மா 803 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார்.