தண்டவாளத்தில் தலை சிதைந்து உயிரிழந்து கிடந்த 16 வயது சிறுமி. உடலில் இருந்த நக கீறல்களால் ஏற்பட்ட பெருத்த சந்தேகம். சிறுமியை அடித்து கொலை செய்து தண்டவாளத்தில் வீசிச் சென்ற இளைஞர் யார்? சிறுமிக்கு நடந்த கொடூர சம்பவத்தின் பின்னணி என்ன?ரயில்வே தண்டவாளத்தில் கிடந்த சிறுமியின் சடலம்ரயில்வே தண்டவாளத்துல சிறுமி ஒருத்தங்க, தலை சிதைஞ்சு கிடக்குறதா லோக்கல் போலீஸுக்கு தகவல் வந்துருக்கு. அடுத்து, அங்க போன போலீஸ்காரங்க அந்த சிறுமி, ரயில் மோதி இறந்திருக்கலாம்னு நினைச்சு போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பி வைக்குற வேலையில ஈடுபட்டுருக்காங்க. அப்போ, அந்த சிறுமியோட உடல்கள்ல நக கீறல்களும், கம்பியால அடிச்ச காயங்களும் இருக்குறத கவனிச்ச போலீசார் இது விபத்து இல்ல கொலை-ங்குறத உறுதிப்படுத்திருக்காங்க. சிறுமிய கொலை பண்ணது யாரு? எதுக்காக இந்த கொலை நடந்துருக்கு அப்டிங்குற கேள்விகளுக்கு விடை தேட ஆரம்பிச்சிருக்காங்க. அதுலதான், பல திடுக்கிடும் தகவல்களாம் வெளிச்சத்து வந்துச்சு.காதல் என்ற பெயரில் சிறுமியிடம் அத்துமீறிய அன்ஷுஉத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவ சேர்ந்த 16 வயது சிறுமிக்கு, அதே ஏரியாவ சேர்ந்த 20 வயசான அன்ஷு கெளதம்-ங்குற இளைஞர் இன்ஸ்டாகிராம் மூலமா அறிமுகமாகிருக்கான். ஆரம்பத்துல நட்பு ரீதியா பேசி பழகிட்டு இருந்த ரெண்டு பேரும், நாளடைவுல காதலிக்க ஆரம்பிச்சிருக்காங்க. அடிக்கடி மீட்டிங், அவுட்டிங்னு போய் ரெண்டு பேரும் தங்களோட காதல வளர்த்திட்டு வந்துருக்காங்க. சில சமயங்கள்ல ரெண்டு பேரும் பல இடங்களுக்கு போய் எல்லை மீறி பழகுனதாவும் சொல்லப்படுது. காதலை முறித்து கொள்ளலாம் என கூறிய அன்ஷுஆனா, ஒரு கட்டத்துக்கு மேல அன்ஷுவோட காதல் குறஞ்சிட்டே வந்துருக்கு. தெனமும் சிறுமிக்கிட்ட மணிக்கணக்குல பேசிட்டு இருந்த அன்ஷு, கொஞ்ச கொஞ்சமா குறைச்சு நிமிடக்கணக்குல பேசியிருக்கான். ஏன் இப்படி மாறிட்ட, என்னாச்சுன்னு சிறுமி கேட்டப்போ, எனக்கு உன்ன பிடிக்கல, நாம லவ்வ பிரேக்-அப் பண்ணிக்கலாம்னு சொல்லியிருக்கான் அன்ஷு. இத கேட்ட சிறுமிக்கு கண்ணுல இருந்து கண்ணீர் சாரை சாரையா கொட்டியிருக்கு. காதலை கைவிட மறுப்பு தெரிவித்த 16 வயது சிறுமிஎன்னால லவ்வ விட முடியாது, நீ இல்லாம இருக்க முடியாதுன்னு எவ்வளவோ போராடியிருக்காங்க. ஆனா சிறுமிய கழட்டி விட்றனும்ங்குற முடிவ அன்ஷு மாத்திக்கவே இல்ல. என்ன கல்யாணம் பண்ணிக்கிறேன்னு தலையில அடிச்சு சத்தியம் பண்ணிட்டு இப்படி மோசம் பண்ணிட்டியேன்னு அன்ஷுகிட்ட பயங்கரமா சண்டை போட்டிருக்காங்க சிறுமி. அது மட்டுமில்லாம, என்னைய உடனே கல்யாணம் பண்ணிக்கனும், இல்லன்னா நடந்தத எல்லார்கிட்டயையும், முக்கியமா போலீஸ் கிட்ட சொல்லி உன்ன உள்ள தூக்கி வச்சு, எல்லார் முன்னாடியும் உன்ன அசிங்கப்படுதிருவேன்னு கோவத்துல கொந்தளிச்சிருக்காங்க.சிறுமி தொந்தரவு கொடுத்து கொண்டே இருந்ததால் ஆத்திரம்தன்னால முடிஞ்ச அளவுக்கு சிறுமிய சமாதானப்படுத்த பாத்திருக்கான் அன்ஷு. ஆனா, சிறுமி உடனே கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி அன்ஷுவ வற்புறுத்தியிருக்காங்க. அதனால, சிறுமிய கொன்னா தான் நாம நிம்மதியா இருக்க முடியும்னு நினச்சு, அவங்கள கொலை பண்ண முடிவு பண்ணிருக்கான். அதுக்கப்புறம், சிறுமிகிட்ட சமாதானம் பேசுற மாதிரி பேசி, அவங்கள கார்ல வெளிய கூப்பிட்டு போன அன்ஷு, அவங்கள காருக்குள்ள வச்சு கல்லால கொடூரமா தாக்கி துடிக்க துடிக்க கொன்னுருக்கான். அதுக்குப்பிறகு, தன்னோட நண்பர்கள ரெண்டு பேர ஸ்பாட்டுக்கு வர சொன்ன அன்ஷு, சிறுமி சடலத்த மறைவான இடத்துல வீசுறதுக்கு திட்டம் போட்டுருக்கான். அன்ஷுவையும், அவனது 2 நண்பர்களையும் கைது செய்த போலீஸ்சடலத்த அப்படியே வீசுனா போலீஸ்ல மாட்டிடுவோம்னு பயந்த அன்ஷு, தன்னோட நண்பர்களோட சேந்து வேற பிளான் போட்டுருக்கான். அதாவது, சிறுமி சடலத்த தண்டவாளத்துல வீசிட்டு அத தற்கொலை மாதிரி செட்டப் பண்ணிட்டு அங்க இருந்து எஸ்கேப் ஆகிருக்காங்க. சிசிடிவி காட்சில பதிவாகிருந்த அன்ஷுவ பிடிச்சு விசாரிச்சப்ப தான் மொத்த உண்மையும் வெளிச்சத்துக்கு வந்துச்சு. அடுத்து, அன்ஷு மேல மர்டர் கேஸ் ஃபைல் பண்ண காவல்துறையினர், அவனையும், கொலைக்கு உடந்தையா இருந்த அவனோட நண்பர்கள் ரெண்டு பேரையும் அரெஸ்ட் பண்ணி ஜெயில்ல தள்ளிருக்காங்க. Related Link கீரி கடித்து சிறுவன் மரணம்