பிரபல மலையாள நடிகை மம்தா மோகன்தாஸ் சமீபத்திய ஒரு பேட்டியில் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த அதிர்ச்சி அனுபவத்தை திறந்த மனதுடன் பகிர்ந்துள்ளார்.டேட்டிங் அழைத்த பிரபல நடிகர்...தான் ஒரு கட்டத்தில் வாழ்க்கையில் உறவுக்காக காத்திருந்த போது, மலையாள திரையுலகைச் சேர்ந்த ஒரு பிரபல நடிகர் தன்னை டேட்டிங் செல்ல அழைத்ததாக மம்தா தெரிவித்துள்ளார். ஏமாற்றத்தால் உறவு முறிந்ததுகுடும்பத்தின் ஒப்புதலுடன் அந்த உறவை முன்னெடுக்க நினைத்த நிலையில், ஒரு மாதத்திற்கு பிறகு அந்த நடிகர் ஏற்கனவே மற்றொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்திருந்தது தெரிய வந்ததாக கூறினார். இந்த உண்மை அவருக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.அந்த உறவும் நீடிக்கவில்லைஅதன்பிறகு வேறு ஒருவரை சந்தித்தாலும், அந்த உறவும் நீடிக்கவில்லை என்றும், இதனால் காதல் மற்றும் டேட்டிங் குறித்து தனது பார்வை மாறிவிட்டதாக மம்தா மோகன்தாஸ் கூறினார். திருமண வாழ்வும் கொஞ்சம் காலம்தான்...தனது முன்னாள் திருமண வாழ்க்கையைப் பற்றியும் அவர் பேசியுள்ளார். குடும்ப நிகழ்ச்சியில் அறிமுகமான நபருடன் திருமணம் செய்துகொண்டாலும், அந்த உறவு குறுகிய காலத்திலேயே முடிவுக்கு வந்ததாக தெரிவித்தார்.மீண்டும் திருமணம் செய்யத் தயார் எதிர்காலத்தில் உண்மையான புரிதலுடன் கூடிய உறவு அமைந்தால் மீண்டும் திருமணம் செய்யத் தயார் என்றும் மம்தா மோகன்தாஸ் கூறியுள்ளார். தற்போது அவர் தனது திரைப்படப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். Related Link நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் மகள் இமயா