நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா திருமணத்திற்குப் பிறகு ஒரு மாத காலம் சினிமாவிலிருந்து முழுமையான ஓய்வு எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சினிமாவிலிருந்து முழுமையான ஓய்வு?ராஜஸ்தானின் உதய்பூர் நகரில் நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை ராஷ்மிகா மந்தனா திருமணம் நடைபெற உள்ளது. உள்ளது. திருமணத்திற்குப் பிறகு, இருவரும் ஒரு மாத காலம் வேலைகளில் இருந்து விலகி, தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா திட்டம் ? இந்த காலத்தில் செல்போன்கள், சமூக ஊடகங்கள் உள்ளிட்டவற்றிலிருந்து முழுமையாக விலகி இருக்கவும், பிரபலங்களின் கூட்டம் இல்லாத அமைதியான நேரத்தை ஒன்றாக கழிக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். எளிமையாக திருமணம் செய்ய முடிவு?திருமணம் மிக நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் வகையில் எளிமையாக நடைபெறும் என கூறப்படுகிறது. இருப்பினும், இந்த தகவல்கள் குறித்து இருவரும் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை.