பாலத்தில் ரத்தம் படிந்த நிலையில் கிடந்த சாக்கு மூட்டை. சாக்கு மூட்டையை பிரித்து பார்த்த போலீஸ்க்கு காத்திருந்த அதிர்ச்சி. சாக்கு மூட்டைக்குள் நிர்வாணமாக தலையில்லாமல் ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணின் சடலம். சிசிடிவி மூலம் கொலையாளியை கையும் களவுமாக பிடித்த போலீஸ். இளம்பெண் கொலை செய்யப்பட்டது ஏன்? தலையை வெட்டி கொலை செய்யும் அளவுக்கு இளம்பெண் மீது என்ன கோபம்? நடந்தது என்ன?சிசிடிவியில் பதிவாகியிருந்த முகம் ஜவஹர் பாலத்துல ரத்தம் படிஞ்ச நிலையில ஒரு சாக்கு மூட்டை ஒன்னு கிடந்துருக்கு. இதபாத்த அதிர்ச்சியடைஞ்ச பொதுமக்கள் போலீஸ்க்கு ஃபோன் பண்ணி தகவல சொல்லிட்டாங்க. உடனே சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் அந்த சாக்கு மூட்டையை பிரிச்சு பாத்துருக்காங்க. அதுல நிர்வாணமா, தலையில்லாம ஒரு இளம்பெண்ணோட சடலம் கிடந்துருக்கு. இந்த சடலத்த மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வச்ச போலீஸ் இளம்பெண் கொலை செஞ்சது யாருன்னு தெரிஞ்சுக்க அங்குள்ள சிசிடிவி காட்சிகள எடுத்து பாத்துருக்காங்க. அதுல இளைஞர் ஒருத்தரு, பைக்ல ஒரு சாக்குமூட்டைய எடுத்துட்டு வந்து பாலத்துல தூக்கி வீசிட்டு போன காட்சி பதிவாகியிருந்துருக்கு. அந்த சிசிடிவியில பதிவாகியிருந்த பைக் நம்பர வச்சு போலீஸ், அந்த இளைஞர் யாருன்னு விசாரிச்சுருக்காங்க. அதுல அவரு சஞ்சய் பிளேஸ் பகுதியை சேந்த வினய் சிங்ன்னு தெரியவந்துச்சு. அதுக்கப்புறம் நேரா அவரோட வீட்டுக்கு போன போலீஸ் வினய் சிங்க கஸ்டடியில் எடுத்து விசாரிச்சுருக்காங்க. தினமும் காதல் ஜோடிக்குள் மூண்ட தகராறுஉத்தரபிரதேசத்துல உள்ள சஞ்சய் பிளேஸ் பகுதிய சேந்த மின்கி ஒரு ப்ரைவேட் கம்பெனியில hrஆ வேலை பாத்துட்டு இருந்தாங்க. இவங்களும் இதே கம்பெனியில வேலை பார்த்த COMPUTER OPERATOR வினய் சிங்கும் லவ் பண்ணிட்டு இருந்துருக்காங்க. இவங்க காதல் விஷயம் ரெண்டு பேரோட வீட்டுக்கும் தெரியும். நல்லா போய்ட்டு இருந்த இவங்க லவ்ல திடீர்ன்னு பிரச்னை ஏற்பட ஆரம்பிச்சுருக்கு. ரெண்டு பேரும் அடிக்கடி சண்டை போட்டுக்கிட்டே இருந்துருக்காங்க. இதனால வினய் கிட்ட பேசுறத குறைச்சுக்கிட்ட மின்கி, அவரோட மொபைல் நம்பர், வாட்ஸ் அப், இன்ஸ்டான்னு எல்லாத்தையும் ப்ளாக் பண்ணிருக்காங்க.வினயிடம் பேச்சை குறைத்த இளம்பெண் மின்கிஅடுத்து மின்கி வேற ஒரு இளைஞர் கூட பேசிப் பழகிட்டு இருந்ததா கூறப்படுது. இதனால கடும் கோபமான வினய், மின்கி கிட்ட சண்டை போட்ருக்காரு. எதுக்கு என்னோட ஃபோன் நம்பர ப்ளாக் பண்ண, என்னைய கழட்டிவிட்டுட்டு எதுக்கு இன்னொருத்தன் கூட பேசிட்டு இருக்கன்னு சண்டை போட்ருக்காரு. அதுக்கு மின்கி, நீ என்கிட்ட எப்பவும் சண்டை போட்டுக்கிட்டே இருக்க, உன் கூட என்னால நிம்மதியா வாழ முடியல, அதனால தான், நான் அவன் கூட பேசிப் பழக ஆரம்பிச்சேன், தயவு செஞ்சு நீ என்கிட்டே இனிமே பேச ட்ரை பண்ணாத, என் லைப்ல இருந்து விலகிருன்னு சொல்லிட்டு போய்ட்டாங்க. இதனால அப்பெண் மேல கடும் கோபத்துல இருந்த வினய், தனக்கு கிடைகாத மின்கி வேற யாருக்கும் கிடைக்க கூடாதுன்னு நினைச்சு அவங்கள கொலை செய்ய திட்டம் போட்ருக்காரு. சம்பவத்தன்னைக்கு சாயங்கால நேரத்துல அலுவலகத்துல யாருமே இல்லை. எல்லாரும் வேலைய முடிச்சுட்டு வீட்டுக்கு போய்ருக்காங்க. அப்ப மின்கியோட அறைக்கு போன காதலன், தன்னை மீண்டும் காதலிக்கும் படி பேசிருக்காரு.காதலன் வினய் சிங்கை கைது செய்து விசாரித்து வரும் போலீஸ்அப்ப ரெண்டு பேருக்கு இடையில பிரச்னை ஏற்பட்டிருக்கு. இதனால கடும் கோபமான வினய், மறைச்சு வச்சுருந்த கத்திய எடுத்து மின்கிய கை, கால், முகம்ன்னு எல்லா இடங்களையும் குத்திக் கொன்னுருக்கான். அடுத்து அடையாளம் தெரியக் கூடாது-ங்குறதுக்காக மின்கியோட தலைய துண்டா வெட்டி எடுத்த வினய் அத ஒரு பைக்கு உள்ளையும், சடலத்த சாக்கு மூட்டையிலையும் வச்சு கட்டிருக்கான். அடுத்து அந்த சாக்குமூட்டைய பைக்ல வச்சு எடுத்துட்டு போயி தலையை ஒரு காட்டுப்பகுதியில வீசிட்டு, சடலத்த யமுனை ஆத்துல வீச திட்டம் போட்ருக்கான். அதுக்காக ஜவஹர் பாலம் வழியா போய்ட்டு இருந்தான். ஆனா அங்க பொதுமக்கள் நடமாட்டம் அதிகமா இருந்ததால, வினய் சாக்குமூட்டைய பாலத்துலையே போட்டுட்டு தப்பிச்சு போய்ட்டான். மின்கியோட பெற்றோர் மகள காணும்ன்னு பல இடங்கள தேடிட்டு காவல் நிலையத்துல புகார் அளிச்சுட்டாங்க. விசாரணையில, சிசிடிவி காட்சி மூலமா வினய் தான் கொலையாளின்னு கன்பார்ம் பண்ண போலீஸ் வீட்ல பதுங்கியிருந்த அவன சுத்தி வளச்சு பிடிச்சு சிறையில் அடைச்சுட்டாங்க. Related Link கீரி கடித்து சிறுவன் மரணம்