கேரளா... பள்ளி சென்ற 14 வயது சிறுமி மாயம். சந்தேகத்தின் பேரில் 16 வயது சிறுவனை பிடித்து விசாரணை. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல். சிறுமியின் மூச்சை திணறடித்து கொன்ற பயங்கரம். வீட்டின் அருகே உள்ள முட்புதரில் கிடந்த மகளின் கோலத்தை பார்த்து கதறிய பெற்றோர்.14 வயது சிறுமியை, 16 வயது சிறுவன் கொலை செய்ததற்கு என்ன காரணம்.? பின்னணி என்ன.?நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பாத 14 வயது சிறுமிஸ்கூல் போன 14 வயசு சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பல. அதனால, பதற்றமான பெற்றோர் நேரா ஸ்கூலுக்கு போய் விசாரிச்சப்ப, சிறுமி ஸ்கூலுக்கே வரலன்னு அங்க இருந்த டீச்சர்ஸ் சொல்லிருக்காங்க. அது பெற்றோருக்கு உச்சகட்ட பயத்த ஏற்படுத்திருக்குது. சிறுமிய பல இடங்கள்ல தேடி பாத்தும் கிடைக்காததால, போலீஸ் ஸ்டேஷன்ல போய் கம்ப்ளைண்ட் கொடுத்திருக்காங்க. அதுக்கப்புறம், உறவினர்களும், போலீஸும் விடிய விடிய சிறுமிய தேடி அலைஞ்சிருக்காங்க. கடைசியில, நடுராத்திரி மூணு மணியளவுல, கருவாரக்குண்டு புதர்ல, சிறுமி இறந்து கிடக்குறதா போலீஸுக்கு தகவல் வந்திருக்கு. உடனே அங்க போய் பாத்தா, இறந்து கிடக்குறது, காணாம போன சிறுமினு தெரியவந்துருக்கு. அதுக்கப்புறம் சிறுமியோட சடலத்த மீட்டு போஸ்ட்மார்டத்துக்கு அனுப்பி வச்ச போலீஸ், சிறுமியோட தாய் கிட்ட விசாரணையில இறங்குனாங்க.காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்த சிறுவனை பிடித்து விசாரணைஅப்ப, என் மகள நான் நல்லபடியா வளர்த்தேன், ஆனா இதே பகுதிய சேந்த 16 வயசு சிறுவன் ஒருத்தன், என் மகளுக்கு அடிக்கடி தொல்லை கொடுத்துட்டே இருந்தான், அவன பத்தி என் மகளே என்கிட்ட பலமுறை சொல்லிருக்கா, எனக்கு அவன் மேல தான் சந்தேகமா இருக்குதுன்னு சொல்லிருக்காங்க. இதனால போலீசார் நேரா அந்த சிறுவனோட வீட்டுக்கு போய்ருக்காங்க. அப்ப அந்த சிறுவன் வீட்ல இல்ல. சிறுவனோட செல்போன் நம்பர ட்ரேஸ் பண்ணி விசாரிச்சுருக்காங்க போலீஸ். அப்ப சிக்னல், கருவாரக்குண்டுல உள்ள காட்டுப் பகுதியில காட்டிருக்கு. இதனால போலீசார் சிக்னல் காட்டுன இடத்துக்கு உடனே போய்ருக்காங்க. அப்ப போலீச பாத்ததும் அந்த சிறுவன் புதருக்குள்ள ஒளிஞ்சுருக்கான். அத நோட் பண்ண போலீஸ், அந்த சிறுவன சுத்தி வளைச்சு பிடிச்சு, நேரா போலீஸ் ஸ்டேஷன் கொண்டு போய் விசாரிச்சுருக்காங்க.14 வயது சிறுமியை காதலித்து வந்த 16 வயது சிறுவன்கேரளாவுல உள்ள மலப்புரம் பகுதிய சேந்த 14 வயது சிறுமி அதே பகுதியில உள்ள ஒரு பள்ளியில ஒன்பதாம் வகுப்பு படிச்சுட்டு இருந்தாங்க. அந்த சிறுமிய அதே பகுதிய சேந்த 12ம் வகுப்பு மாணவன் ஒருத்தன் ஒருதலைப் பட்சமாக காதலிச்சுட்டு இருந்தான். சிறுமி பள்ளிக்கு போகும்போதெல்லாம், அவங்கள பின்தொடர்ந்து ரொம்ப தொல்லை கொடுத்துட்டு இருந்துருக்கான். கொஞ்ச நாளைக்கு முன்னாடி சிறுமி தனியா பள்ளிக்கு போய்ட்டு இருந்தாங்க. அப்ப சிறுமிய பாதி வழியில வழிமறிச்ச சிறுவன், நான் உன்ன ரொம்ப சின்சியரா லவ் பண்றேன்னு சொல்லிருக்கான். இதகேட்டு கோபமான சிறுமி, நீங்க யாருனே எனக்கு தெரியாது, எதுக்கு என்கிட்ட வந்து லவ்வ சொல்றிங்க, எனக்கு இந்த லவ் பிடிக்காது, அது எங்க குடும்பத்துக்கும் செட் ஆகாது, அதனால இனிமே என்ன ஃபாலோ பண்ற வேலைய வச்சுக்காதிங்கன்னு சொல்லிட்டு அங்கருந்து கிளம்பிட்டாங்க. அடுத்து பள்ளி முடிஞ்சு வீட்டுக்கு போன சிறுமி, நடந்த எல்லா விஷயத்தையும் தன்னோட தாய் கிட்ட சொல்லிருக்காங்க.சிறுமியை காட்டுப் பகுதிக்கு கடத்திச் சென்ற சிறுவன்இதனால சிறுமியோட தாய், அந்த மாணவன கண்டிச்சுருக்காங்க. படிக்க வேண்டிய வயசுல எதுக்கு இப்படி லவ் பண்ணி என் மகள டார்ச்சர் பண்ணிட்டு இருக்க, என் மகள் பின்னாடி சுத்துறத இத்தோட நிப்பாட்டிக்கோ, இதுக்கப்புறமும் என் மகள நீ டார்ச்சர் பண்ணனா, உன் மேல போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைண்ட் பண்ணிருவேன்னு மிரட்டிருக்காங்க. ஆனா அந்த சிறுவன் எதையும் கேட்குற மாதிரி தெரியல. தொடர்ந்து அந்த சிறுமிக்கு லவ் டார்ச்சர் கொடுத்துட்டே இருந்துருக்கான். சம்பவத்தன்னைக்கு வழக்கம்போல சிறுமி ஸ்கூலுக்கு கிளம்பி போய்ட்டு இருந்துருக்காங்க. அப்ப சிறுமிய பாதி வழியில வழிமறிச்ச சிறுவன், பக்கத்துல உள்ள காட்டுப்பகுதிக்கு கடத்திட்டு போய்ருக்கான். அங்க வச்சு மறுபடியும் சிறுமிக்கு லவ் டார்ச்சர் கொடுத்துருக்கான். அப்ப சிறுமி அங்கருந்து தப்பிச்சு ஓட பாத்துருக்காங்க. ஆனா சிறுமிய சரமாரியா தாக்குன அந்த சிறுவன், சிறுமி கிட்ட தப்பா நடக்க முயற்சி பண்ணிருக்கான்.சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 16 வயது சிறுவன்உன்ன எனக்கு சுத்தமா பிடிக்கல, என்ன தயவு செஞ்சு விட்ருன்னு சொல்லி அழுதுருக்காங்க அந்த சிறுமி. ஆனா அந்த நேரத்துல சிறுவன், சிறுமிய பாலியல் பலாத்காரம் பண்ணிருக்கான். இதனால வலிதாங்க முடியாத அந்த சிறுமி, இங்க நடந்த எல்லாத்தையும் எங்க அம்மா கிட்ட சொல்லுவேன், போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைண்ட் பண்ணி உன்ன சும்மா விடமாட்டேன்னு மிரட்டிருக்காங்க. இதகேட்டு பயந்துபோன சிறுவன், சிறுமிய உயிரோட விட்டு வச்சா நம்மள மாட்டி விட்ருவான்னு நினைச்சு, சிறுமிய கழுத்த நெரிச்சு கொடூரமா கொலை பண்ணிருக்கான். அடுத்து சடலத்த ரயில்வே ஸ்டேஷன் பக்கத்துல உள்ள முட்புதருக்குள்ள வீசிட்டு தப்பிச்சு போய்ட்டான். ஆனா சிறுவனோட செல்போன் நம்பர வச்சு அவன் இருக்குற இடத்த கண்டுபிடிச்ச போலீஸ், அந்த சிறுவன அரெஸ்ட் பண்ணிட்டாங்க.இதையும் பாருங்கள் - எதிர் வீட்டு மாணவர்களுடன் பழக்கம்