news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 லட்சம் வாக்காளர்கள்
tv

Also Watch

tv

Read this

நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 லட்சம் வாக்காளர்கள்

மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி பேர்

43

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

எஸ்.ஐ.ஆர். நடைமுறைகள் நிறைவடைந்த நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், மொத்தமாக 5 கோடியே 67 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். எஸ்.ஐ.ஆர். நடைமுறைக்கு முன், தமிழ்நாட்டில் வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடியே 41 லட்சம் என்றும் எஸ்.ஐ.ஆர். நடைமுறைக்குப் பின் 74 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி
தமிழகத்தில் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு, எஸ்.ஐ.ஆா். நடைமுறைக்கு பிந்தைய வாக்காளா் இறுதிப் பட்டியல் பிப்ரவரி 23ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதனை, தமிழ்நாடு தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் வெளியிட்டார். இதன்படி,

* தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் - 5,67,07,380
* ஆண்கள் - 2,77,38,925
* பெண்கள் - 2,89,60,838
* மூன்றாம் பாலினத்தவர் - 7,671
* வாக்காளர்கள் நீக்கம் - 74,07,207

வாக்காளர்கள் கவனத்திற்கு...
தமிழகத்தில் அக்டோபர் 27ஆம் தேதி நிலவரப்படி, 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். எஸ்.ஐ.ஆர். நடைமுறைக்குப் பிறகு வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் 5.43 கோடியாக குறைந்தது. இதில் மொத்தம் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தனர். இதையடுத்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு டிசம்பர் 19 முதல் பிப்ரவரி 10ஆம் தேதி வரை பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய அவகாசம் தரப்பட்டது. பெயர் சேர்க்க, நீக்க அவகாசம் தரப்பட்ட நிலையில் form-6 மூலம் 27,53,796 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர்.
வாக்காளர்கள் தங்களது பெயர்கள் வாக்காளர் இறுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா? என்பதை https://elections.gov.tn.in என்கிற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.


Related Link
யாருக்கு வாய்ப்பு?

யாருக்கு வாய்ப்பு?

              


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 16042026

2
1 hr 22 mins agoshare
இன்றைய ராசிபலன்கள்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved