சிட்னியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் பந்தை சேதப்படுத்துவதாக அந்நாட்டு ரசிகர்கள் மைதானத்தில் குரல் எழுப்பியதற்கு விராட் கோலி பதிலடி கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. பந்தை சேதப்படுத்தி விட்டதாக ஆஸ்திரேலிய ரசிகர்கள் குரல் எழுப்பியதை கவனித்த விராட் கோலி, தன்னுடைய பேண்ட் பாக்கெட்டை உள்ளிருந்து வெளியில் இழுத்து ரசிகர்களிடம் காண்பித்தார். மேலும் தன்னிடம் 'சாண்ட் பேப்பர்' இல்லை என்றும், நாங்கள் உங்களைப் போல் பந்தை சேதப்படுத்த மாட்டோம் என்றும் சைகையில் ரசிகர்களுக்கு விராட் கோலி பதிலடி கொடுத்தார்.