தெற்கு பிலிப்பைன்ஸில் புதன்கிழமை 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது. மிண்டானாவோ தீவின் கடற்கரையில் 30 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மக்கள் தொகை குறைவாக உள்ள பகுதியில் அமைந்துள்ள மைதும் நகரத்திலிருந்து தென்மேற்கே சுமார் 43 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்க மையம் கண்டறியப்பட்டதாகவும், சேதங்கள் குறித்த விபரங்கள் தெரியவில்லை என கூறப்பட்டுள்ளது.