தமிழகத்தில் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்களில் ஜனவரி 1 ஆம் தேதி வரையிலான நிலவரப்படி 220 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக, உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கை விரைந்து முடிக்கக்கோரி பாஜக வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் என்பவர் மனு தாக்கல் செய்தார்.