Also Watch
Read this
By: Manigandan Raja
சொந்த எரிசக்தி தேவையை நிறைவு செய்ய மற்றொரு நாட்டின் அனுமதியை இந்தியா பெற வேண்டிய தேவை என்ன? என, மத்திய பாஜக அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

30 நாட்களுக்கு மட்டுமே அனுமதி
இதுதொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு:
ரஷ்யாவிடம் இருந்து, 30 நாட்களுக்கு மட்டுமே, இந்தியா எண்ணெய் வாங்க அமெரிக்கா முடிவு செய்யும்போது, அது ஒரு அடிப்படை கேள்வியை எழுப்புகிறது. இந்தியாவின் வெளியுறவு கொள்கை நிலைப்பாட்டில் இருந்து ஒன்றிய பாஜக அரசு சமரசம் செய்து கொண்டுள்ளது. இந்தியாவின் நீண்ட கால தன்னிச்சையான வெளியுறவு கொள்கையில், ஒன்றிய பாஜக அரசு சமரசம் செய்துள்ளது.

இந்தியா மவுனம் ஏன்?
சர்வதேச அரங்கில் இந்தியாவின் மரியாதை, தேசிய நலன், இறையாண்மை காக்கப்பட வேண்டும். நமது நாட்டின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய மற்றொரு நாட்டின் அனுமதி ஏன் தேவை? இந்தியாவுக்கு வந்த ஈரான் போர்க்கப்பல் தாக்கப்பட்ட விவகாரத்தில், ஒன்றிய அரசு எப்படி மவுனமாக இருக்க முடியும்? ஈரானின் IRIS DEENA போர்க்கப்பலை அமெரிக்கா தாக்கியதற்கு இந்தியா கருத்து தெரிவிக்காதது ஏன்?
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.


ஈரான் - இஸ்ரேல் போர் காரணமாக, உலக அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, இந்திய எண்ணெய் நிறுவனங்கள் 30 நாட்களுக்கு ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய அமெரிக்கா அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved