Also Watch
Read this
By: Web Team

16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான 2-வது ஆசிய வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய அணி வெண்கல பதக்கத்தை கைப்பற்றியது.
தாய்லாந்தில் உள்ள நகோன் பாதோம் நகரில் நடந்த போட்டியில், இந்திய அணி அரையிறுதியில் பாகிஸ்தானிடம் தோல்வி கண்டதால் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் சனிக்கிழமை ஜப்பானை சந்தித்தது.
இதில் இந்திய அணி 25 க்கு 21, 25 க்கு 23, 15 க்கு10 என்ற செட் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி வெண்கல பதக்கத்தை வென்றது.
இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி நடப்பு சாம்பியனான ஈரானை வீழ்த்தி தங்க பதக்கத்தை வென்றது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved