Also Watch
Read this
Posted on: Nov 10, 2025 06:45 AM
By: Web Team

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் 14 பேரை கைது செய்த இலங்கை கடற்படை, அவர்களின் விசைப்படகையும் சிறை பிடித்து சென்றது.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, கைது செய்யப்பட்ட மீனவர்கள் விசாரணைக்காக காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்தால் தங்களின் வாழ்வாதாரம் அழிவை நோக்கிச் செல்வதாக வேதனை தெரிவிக்கும் மீனவர்கள், மத்திய, மாநில அரசுகள் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண கோரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved