சட்டப்பேரவையில், தமிழகத்தின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, வரும் நிதியாண்டில் அரசின் கடன் பத்தரை லட்சம் கோடி ரூபாயை தாண்டும் என கூறியுள்ளார்.2026 - 27ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 809 கோடி ரூபாய் கடன் வாங்க திட்டமிட்டிருப்பதாக அவர் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 60 ஆயிரத்து 143 கோடி ரூபாய் மதிப்பிலான பொதுக்கடனை அரசு திருப்பிச் செலுத்தும் எனவும் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். தமிழ்நாட்டின் திட்டங்களை பிற மாநிலங்களும் செயல்படுத்துவதாக பெருமிதம்பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் எனத் தொடங்கும் திருக்குறளை மேற்கோள் காட்டி நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, நடப்பாண்டிற்கான தமிழ்நாட்டின் இடைக்கால நிதிநிலை அறிக்கையினை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அனைத்து துறைகளுக்கும் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. அரசின் திட்டங்களுக்கு எவ்வளவு தொகை செலவிடப்பட்டிருக்கிறது என்பது உள்ளிட்டவற்றையெல்லாம் பட்டியலிட்டார் தங்கம் தென்னரசு. தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்களை பிற மாநிலங்களும் செயல்படுத்தி வருவதாக குறிப்பிட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு, புதிய அருங்காட்சியகங்கள் அமைப்பதற்காக 285 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அறிவித்தார். மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு 630 கோடி ரூபாய் செலவில் 10 ஆயிரத்து 469 வீடுகள் கட்டித் தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகைக்காக ஒரே நாளில் 6 ஆயிரத்து 500 கோடி ரூபாயை விடுவித்து ஏழைகளின் கரங்களுக்கு கொண்டு சேர்த்தவர் முதலமைச்சர் எனவும் இதனால் தமிழ்நாடே இன்ப அதிர்ச்சியில் உள்ளதாகவும் தங்கம் தென்னரசு புகழாரம் சூட்டினார்.நிதி ஒதுக்கீடுகள் - புள்ளிவிவரம்பள்ளிக்கல்வித் துறைக்கு 48 ஆயிரத்து 534 கோடி ரூபாயும், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ஆயிரத்து 471 கோடி ரூபாயும், அனைத்து சமூக பாதுகாப்புத் திட்டங்களுக்கும் 5 ஆயிரத்து 463 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. உயர்கல்வித்துறைக்கு 8 ஆயிரத்து 505 கோடி, துணை முதல்வர் வசமுள்ள சிறப்புத் திட்ட செயலாக்கத் துறைக்கு 17 ஆயிரத்து 88 கோடியும், விளையாட்டுத் துறைக்கு 718 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சி துறைக்கு 28 ஆயிரத்து 687 கோடி, நகராட்சி நிர்வாகத் துறைக்கு 28 ஆயிரத்து 227 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. தொழிலாளர் நலத் துறைக்கு ஆயிரத்து 996 கோடி ரூபாய், மருத்துவத் துறைக்கு 22 ஆயிரத்து 90 கோடி ரூபாய், தொழில் முதலீடு ஊக்குவிப்புத் துறைக்கு 4 ஆயிரத்து 882 கோடி ரூபாய், சிறு குறு நடுத்தர தொழில் துறைக்கு ஆயிரத்து 943 கோடி ரூபாய், தகவல் தொழில்நுட்பத் துறைக்கு 219 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. எரிசக்தி துறைக்கு 18 ஆயிரத்து 091 கோடி ரூபாயும் போக்குவரத்து துறைக்கு 13 ஆயிரத்து 62 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீர்வளத்துறைக்கு 10 ஆயிரத்து 76 கோடியும், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறைக்கு 21 ஆயிரத்து 132 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.எரிசக்தி துறை - ரூ.18,091 கோடி சுற்றுலாத்துறைக்கு ஆயிரத்து 394 கோடி ரூபாயும், கைத்தறித் துறைக்கு ஆயிரத்து 943 கோடி ரூபாயும், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறைக்கு 7 ஆயிரத்து 547 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மீன்வளம் மற்றும் பால்வளத்துறைக்கு 4 ஆயிரத்து 435 கோடி ரூபாயும், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைக்கு ஆயிரத்து 634 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர அண்மையில் அரசால் அறிவிக்கப்பட்ட உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்காக 11 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுவதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.அரசு ஊழியர் விபத்தில் உயிரிழந்தால் ரூ.1 கோடி நிவாரணம்அரசு ஊழியர் விபத்தில் உயிரிழந்தால் 1 கோடி ரூபாய் நிவாரணம், சேலம், கோவை, நெல்லை அரசு பொறியியல் கல்லூரிகளில் திறன்மிகு மையங்கள் அமைக்கப்படும், திருச்சி, மதுரை, ஓசூரில் ஆயிரத்து 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும், குந்தம்பாக்கம் பேருந்து நிலையம் விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் போன்ற பல புதிய அறிவிப்புகளும் தமிழ்நாடு அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.தமிழகத்தின் நிதி நிலைமை என்ன? உரையின் இறுதியில், தமிழகத்தின் நிதி நிலைமை குறித்த புள்ளிவிவரங்களை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். 2025-26ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 9,29,959 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்ட மாநிலத்தின் ஒட்டுமொத்த நிலுவைக் கடன், 2025-26 ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில் 9,52,374 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக கூறினார். எனினும், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு, மத்திய அரசின் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதால், மத்திய அரசின் கணக்குகளில் இடம்பெற வேண்டிய 9 ஆயிரத்து 522 கோடி ரூபாயும் இதில் உள்ளடங்கும் எனக் குறிப்பிட்டார். மத்திய அரசு தர வேண்டிய ரூ.9,500 கோடி நிலுவைக் கடனில் நீடிக்கிறதுநடப்பு நிதியாண்டில் அரசின் சொந்த வருவாய் 2 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாயிலிருந்து 2 லட்சத்து 6 ஆயிரம் கோடியாக குறைந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. வரி வருவாய் குறைந்ததே மாநில அரசின் வருவாய் குறைவுக்கு காரணம் என அமைச்சர் கூறினார். வரும் ஆண்டில் மாநில அரசின் சொந்த வருவாய் 11 புள்ளி 15 சதவீதம் உயரும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். மத்திய அரசு தர வேண்டிய 9 ஆயிரத்து 500 கோடி ரூபாய், நிலுவைக் கடனில் தொடர்ந்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.2026-27 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு - செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 10 லட்சத்து 62,248 கோடி ரூபாயாகவும் கடன் மதிப்பிடப்பட்டுள்ளது என்றும், அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். Related Link 3ஆவது நாளாக குறைந்த தங்கம் விலை