அறைக்குள் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்த மகள். மகளின் சடலத்தை கண்டு கத்தி கதறி அழுத பெற்றோர். தினம் தினம் தனது மகளை அடித்து, கணவன் டார்ச்சர் செய்ததாக புகார் அளித்த பெண்ணின் பெற்றோர். கணவனை கஸ்டடியில் எடுத்து கிடுக்குப்பிடி விசாரணையில் இறங்கிய போலீஸ். அடுத்தடுத்து விசாரணையில வெளியான பகீர் தகவல். மனைவி உயிரிழந்தது எப்படி? கொலையா? தற்கொலை? நடந்தது என்ன?கணவனிடம் சண்டையிட்டு தாய் வீட்டிற்கு வந்த பெண்கணவன் கூட சண்டை போட்டுட்டு தாய் வீட்டுக்கு போய்ருக்காங்க இளம்பெண் கீர்த்தி. அடுத்து நைட்டு டின்னர முடிச்சுட்டு தன்னோட அறைக்கு தூங்க போன கீர்த்தி காலையில 7 மணியாகியும் அறைய விட்டு வெளிய வரல. கீர்த்தியோட அம்மா, மகளோட ரூம் கதவ பலமுறை தட்டி பாத்துருக்காங்க. ஆனா அந்த ரூம் உள்ள இருந்து எந்த ஒரு சத்தமும் கேட்கல. இதனால பதற்றமடைஞ்ச தாய், அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்க உதவியோட, கதவ உடைச்சுட்டு உள்ள போய் பாத்துருக்காங்க. அப்ப கீர்த்தி தூக்குல தொங்கியபடி பிணமா கிடந்துருக்காங்க. இந்த விஷயத்த கேள்விப்பட்டு ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ் கீர்த்தியோட சடலத்த மீட்டு போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பி வச்சுட்டு, கணவர் குருபிரசாத்த கஸ்டடியில எடுத்து விசாரிச்சுருக்காங்க. ரூ.30 லட்சம் வரை வரதட்சணை கொடுத்த கீர்த்தியின் பெற்றோர்பெங்களூரு பனசங்கரி பகுதிய சேந்த குருபிரசாத் அங்குள்ள ஒரு ஜிம்ல பயிற்சியாளரா வேலை செஞ்சுட்டு இருந்துருக்காரு. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி இவருக்கும் அதே பகுதியை சேந்த கீர்த்தி-ங்குற பெண்ணுக்கும் பெற்றோர் சம்மதத்தோட நிச்சயம் ஆகிருக்கு. கல்யாணத்துக்கு முன்னாடி குருபிரசாத்தோட வீட்ல நகை, கார், பணம்ன்னு எல்லாத்தையும் வரதட்சணையா கேட்ருக்காங்க. ஊர்காரங்க எல்லாரும் ரொம்ப நல்ல குடும்பம்ன்னு சொன்னதால கீர்த்தியோட பெற்றோர், மாப்ள வீட்ல சொன்ன எல்லாத்துக்கும் ஓகே சொல்லிருக்காங்க. அதுமட்டும் இல்லாம 30 லட்சம் ரூபாய குருபிரசாத்துக்கு வரதட்சணையாக கொடுத்த கீர்த்தியின் பெற்றோர், மகளோட கல்யாணத்தையும் ஜாம் ஜாம்ன்னு மிகப் பிரமாண்டமாக நடத்தி முடிச்சுருக்காங்க. பல கனவுகளோட புகுந்த வீட்டுக்கு வாழப்போன கீர்த்திக்கு அதுக்கப்புறம் தான் ஒரு ஒரு பிரச்னையா ஆரம்பமாகிருக்கு. கல்யாணமான 6 மாசத்துக்கு அப்புறம், குருபிரசாத் சொந்தமா ஜிம் வைக்கிறதுக்காக கூடுதல் பணம் வாங்கிட்டு வரச்சொல்லி கீர்த்திய போட்டு அடிச்சு சித்ரவதை பண்ணதா கூறப்படுது.ரூ.10 லட்சம் கேட்டு மனைவியை டார்ச்சர் செய்த கணவர்அதுமட்டும் இல்லாம குருபிரசாத் அதே பகுதியில சொந்தமாக வீடு கட்ட ஆரம்பிச்சுருக்காரு. அப்ப வீடு கட்டுறதுக்கு குருபிரசாத்துக்கு 10 லட்சம் ரூபாய் கூடுதலா தேவை பட்டிருக்கு. இதனால மனைவி கீர்த்தி கிட்ட எனக்கு அவசரமா வீடு கட்டுறதுக்கு பணம் தேவைப்படுது, அதனால உங்க வீட்டுக்கு போய்ட்டு 10 லட்சம் ரூபாய் வாங்கிட்டு வான்னு சொல்லிருக்காரு குருபிரசாத். அதுக்கு கீர்த்தி, எங்க வீட்ல ரொம்ப கஷ்டப்படுறாங்க, கடன் வாங்கி தான் கல்யாணத்தையே பண்ணாங்க, அதனால இவ்ளோ பெரிய அமவுண்ட்லாம் எங்க அப்பா, அம்மாவால ரெடி பண்ண முடியாது, அதே மாதிரி மறுபடியும் பணம் கேட்டு நான் அவங்கள கஷ்டப்படுத்த விரும்பலன்னு சொல்லிருக்காங்க. உங்களுக்கு அவசரமா பணம் தேவைன்னா, உங்க ப்ரண்ட்ஸ் உறவினர்கள் கிட்ட பணம் வாங்கிகோங்கன்னு கடிஞ்சுக்கிட்டு பேசிருக்காங்க கீர்த்தி.தாய் வீட்டிற்கு சென்று ரூ. 8 லட்சம் வாங்கி வந்த கீர்த்திஇதகேட்டு கடுப்பான குருபிரசாத், மனைவிய போட்டு சரமாரியா அடிச்சுருக்காரு. உங்க வீட்டுக்கு போய்ட்டு 10 லட்சம் ரூபாய் வாங்கிட்டு வந்தா தான், உன்ன இந்த வீட்ல இருக்க வைப்பேன், இல்லன்னா நீ உங்க அம்மா வீட்டுக்கே போய்ருன்னு மிரட்டிருக்காரு. இதனால தன்னோட தாய்க்கு ஃபோன் பண்ண கீர்த்தி நடந்த எல்லாத்தையும் சொல்லி புலம்பிருக்காங்க. இதகேட்டு அதிர்ச்சியான பெற்றோர், மகளோட வாழ்க்கை கெட்டுப் போய்றக் கூடாதுன்னு, கடன் வாங்கி 8 லட்சம் ரூபாய கீர்த்தி கிட்ட கொடுத்து விட்ருக்காங்க. கீர்த்தி அந்த பணத்த தன்னோட கணவன் கிட்ட கொடுத்துருக்காங்க. அதுக்கு குருபிரசாத், இந்த கட்டுல 8 லட்சம் ரூபாய் தான் இருக்கு, பாக்கி 2 லட்சம் ரூபாய எங்கன்னு கேட்டு மனைவிய போட்டு அடிச்சுருக்காரு. குருபிரசாத்தோட அப்பா, அம்மாவும் மகன் கூட சேந்துக்கிட்டு மருமகள டார்ச்சர் பண்ணிருக்காங்க. குருபிரசாத்தை கைது செய்து விசாரித்து வரும் போலீஸ்ஒரு கட்டத்துல கடும் கோபமான மனைவி, என்னால 2 லட்சம் ரூபாய வாங்கிட்டு வர முடியாது, உன்ன மாதிரி ஒரு பணத்தாசை பிடிச்சவன் கூட வாழ்றதுக்கு நான் எங்க அம்மா வீட்டுக்கே போறேன்னு சொல்லிட்டு கிளம்பிட்டாங்க. இதகேட்டு கோபத்தோட உச்சத்துகே போன குருபிரசாத்தும் அவரோட பெற்றோரும் கீர்த்திய போட்டு சரமாரியா அடிச்சு தாய் வீட்டுக்கு துரத்தி விட்ருக்காங்க. அடுத்து தாய் வீட்ல இருந்த கீர்த்தி, கணவனோட செயல நினைச்சு நினைச்சு டெய்லி அழுதுக்கிட்டே மனஉளைச்சலுக்கு ஆளாகிருக்காங்க. அதுக்கடுத்து இந்த நரகத்துல வாழவே கூடாதுன்னு முடிவு பண்ண கீர்த்தி, நைட்டு தூங்கப் போனப்ப தன்னோட அறையில தூக்கு மாட்டி உயிரிழந்துட்டாங்க. விசாரணையோட முடிவுல எல்லா உண்மையையும் தெரிஞ்சுக்கிட்ட போலீஸ் கணவர் குருபிரசாத்தையும் அவரோட பெற்றோரையும் அரெஸ்ட் பண்ணி சிறையில அடைச்சுட்டாங்க. Related Link பெற்ற மகனுக்கு எமனாக மாறிய தாய்