மேற்கு வங்கத்தில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கட்டாயத்தால் மீண்டும் சொந்த மாநிலத்திற்கு திரும்பி வந்தால் அவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் மறுவாழ்வு உதவித்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். பாஜக ஆளும் மாநிலங்களில் வேலை செய்யும் மேற்கு வங்கத்தை சேர்ந்த 22 லட்சம் பேரை குறிவைத்து அம்மாநில அரசுகள் துன்புறுத்துவதாக புகார் கூறினார்.