Also Watch
Read this
By: Manigandan Raja

போர் பதற்றம் :
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக, மார்ச் ஒன்றாம் தேதி முதல் மார்ச் 7-ஆம் தேதிவரை 52 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்பியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் ((MEA)) தெரிவித்துள்ளது.
வான்வெளி பகுதி திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய விமானங்கள் மூலம் 32 ஆயிரத்து 107 பேர் உட்பட பலர் மீட்கப்பட்டுள்ளனர். இதனிடையே, வளைகுடா பிராந்தியத்தில், அந்தந்த நாட்டுத் தூதரகங்களின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு இந்தியர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved