சுகாதாரம், கல்வி, திறன் மேம்பாடு மற்றும் பிற துறைகளில் பாலஸ்தீனத்திற்கு இந்தியா உதவியுள்ளதாக வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார். இது தொடர்பான பேட்டியில், மூன்று நாள் பயணமாக அமெரிக்க சென்ற பிரதமர் நேபாளம், பாலஸ்தீனம், குவைத் நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசியதுடன், ஐக்கிய நாடுகள் சபையின் 79-வது பொதுச்சபையின் கூட்டத்திலும் உரையாற்றினார் என்றார். இருதரப்பு சந்திப்புகளை பொறுத்த வரையில் நேபாள பிரதமரும், பிரதமர் மோடியும் சந்திப்பது இதுவே முதல் முறை எனவும், இதன் மூலம் இரு நாட்டு உறவு, எரிசக்தி, மின்சாரம் உள்ளிட்ட துறைகளில் முன்னேற்றம் அடைய முடியும் என விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.