விமானத்தில் திடீரென மயங்கிய பயணிக்கு சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றிய ராணுவ டாக்டருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. சென்னையில் இருந்து அசாமின் கவுகாத்திக்கு சென்ற இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த 75 வயது முதியவர் திடீரென மயங்கினார். இதைக் கண்ட ராணுவ டாக்டர் முகுந்தன், முதியவருக்கு தேவையான சிகிச்சைகளை அளித்தார்.