Also Watch
Read this
By: Web Team

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் தேசிய எழுச்சி தலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். 230 கோடி ரூபாய் செலவில் 65 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த இடத்தில், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், பாஜக சித்தாந்தவாதிகளான சியாமா பிரசாத் முகர்ஜி, பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா ஆகியோரின் 65 அடி உயர வெண்கல சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 98 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் தாமரை வடிவில் கட்டப்பட்டுள்ள அதிநவீன அருங்காட்சியகத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved