மக்களவை தேர்தலில் ஒரு வாக்காளர் இரண்டு முறை வாக்களித்தார் என்ற குற்றச்சாட்டு தொடர்பாக உரிய ஆவணங்களை சமர்பிக்குமாறு மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி காட்டிய டிக் செய்யப்பட்ட ஆவணம் தேர்தல் அலுவலர் கொடுத்தது அல்ல என தேர்தல் அதிகாரி தெரிவித்தார். முன்னதாக நியாயமான தேர்தலுக்கு வெளிப்படைத்தன்மை அவசியம் என்றும், டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை பொதுவெளியில் வெளியிட வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்திடம் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்திருந்தார்.