Also Watch
Read this
Posted on: Nov 24, 2025 01:55 PM
By: Web Team

சர்வதேச குற்றங்களுக்கான தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்த வங்க தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹஸீனாவை, உடனடியாக திருப்பி அனுப்புமாறு இந்தியாவுக்கு வங்க தேச அரசு மீண்டும் கடிதம் அனுப்பி உள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வங்க தேசத்தில் ஏற்பட்ட அரசியல் கிளர்ச்சியை அடக்குவதில் ஷேக் ஹஸீனா அரசு பல கொலைகளை நடத்தியது நிரூபிக்கப்பட்டதாகவும் அவருக்கு மரண தண்டனை விதிப்பதாகவும் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது. வங்க தேச கிளர்ச்சியை தொடர்ந்து அங்கிருந்து தப்பிய ஷேக் ஹஸீனாவுக்கு மத்திய பாஜக கூட்டணி அரசு இந்தியாவில் அடைக்கலம் அளித்துள்ளது. அவரை திரும்ப கொண்டுவந்து மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என டாக்காவில் மக்கள் போராட்டம் வலுத்துள்ள நிலையில் இந்திய அரசுக்கு மீண்டும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved