Also Watch
Read this
By: Web Team

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரான அநீதி உச்சத்தில் உள்ளது என்பது, ஹரியானாவில் மூத்த ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை செய்து கொண்டதன் மூலம் தெரியவந்துள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளார்.
ஹரியானாவில் ஏடிஜிபி அந்தஸ்தில் இருந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரி பூரன்குமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக ராகுல் வெளியிட்ட அறிக்கையில், ரேபரேலியில் வால்மிகி என்பவர் கொலை, தலைமை நீதிபதிக்கு அவமானம், ஐபிஎஸ் அதிகாரியின் தற்கொலை ஆகிய சம்பவங்கள் அனைத்தும் சமூகத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு எதிரான அநீதி உச்சத்தில் இருப்பதைக் காட்டுவதாகவும், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் சமூகத்தில் விஷத்தை பரப்பியுள்ளதாகவும் சாடினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved