எந்த சூழ்நிலையிலும், மக்களின் அசையா சொத்துகளை கையகப்படுத்த காவல் துறையை அனுமதிக்க கூடாது என தீர்ப்பு ஒன்றில் உச்ச நீதிமன்றம் கறாராக தெரிவித்துள்ளது.மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்த நீதிபதிகள் CT ரவிகுமார், சந்தீப் மேத்தா அமர்வு, அசையா சொத்துகளை கையகப்படுத்த போலீசை அனுமதித்தால், சட்டத்தின் ஆட்சி இல்லாமல் போய் விடும் என்பதுடன், மனித உரிமைகள் மறுக்கப்படும் நிலை ஏற்படும் என தெரிவித்தது. சிவில் வழக்குகளில் அசையா சொத்துகளை போலீசார் தங்கள் விருப்பம் போல முடக்கவோ, கையகப்படுத்தவோ சட்டத்தில் இடமில்லை என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.