news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
tv

Also Watch

tv

Read this

செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

பிரக்ஞானந்தா

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பிரதமர் மோடி

சிறப்பை எடுத்துக்காட்டும் அற்புதமான மைல்கல் என பாராட்டு :

நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று புதிய வரலாறு படைத்த இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த மகத்தான சாதனை உண்மையிலேயே அவரது தொடர்ச்சியான சிறப்பை எடுத்துக்காட்டும் ஒரு அற்புதமான மைல்கல் எனவும், அவரது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள் எனவும் தெரிவித்துள்ளார்.

பல மாநிலங்களின் காங். தலைவர்களை மாற்ற முடிவு :

அடுத்த ஆண்டு பல மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், பல மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்களை மாற்ற ராகுல்காந்தி முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கட்சியை பலப்படுத்தவும், தேர்தலில் வெற்றி பெறவும், பல அதிரடி முடிவுகளை எடுக்க கட்சித் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோருடன் ராகுல் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

"நேபாளத்துக்கு இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு" :

நேபாளத்துக்கு இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு என அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஷிஷிர் கனால் தெரிவித்தார். எந்தவொரு பழைய மூட்டையையும் தாங்கள் சுமப்பதில்லை எனவும், தங்களுடைய நெருக்கமான அண்டை நாடும் மிக முக்கிய நட்பு நாடுமான இந்தியாவுடன் உண்மையான உறவை பேண தீர்க்கமான தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஒரே பள்ளியை சேர்ந்த 150 மாணவர்களுக்கு திடீர் காய்ச்சல் :

கேரளத்தில் ஒரே பள்ளியை சேர்ந்த 150 மாணவர்களுக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. வயநாடு மாவட்டம் கொயிலாடி பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் பலருக்கு கடந்த சில தினங்களாக காய்ச்சல் மற்றும் வாந்தி போன்ற பாதிப்புகள் ஏற்பட்டதை அடுத்து, உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனர்.

காய்ச்சலுக்கான காரணம் குறித்து சுகாதாரத்துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

புல்டோசர் மூலம் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிப்பு :

குஜராத் மாநிலம் சூரத் நகரில் சுமார் 100 வீடுகள் புல்டோசர் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. நாசீர்நகர் பகுதியில் நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீஸார் முன்னிலையில் இடிக்கும் பணிகள் நடைபெற்ற நிலையில், இடிக்க உத்தரவிட்டது யார் எனவும், எந்த துறையின் கீழ் அனுமதி பெறப்பட்டது எனவும் வீடுகளை இழந்தவர்கள் அரசிடம் விளக்கம்கேட்டு வருகின்றனர்.

Related Link
குஜராத்துக்கு ரூ.18,778 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள்

குஜராத்துக்கு ரூ.18,778 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள்

               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

1
2 hrs 55 mins agoshare
பிரதமர் மோடி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved