கேரளாவின் பாலக்காட்டில் நிபா வைரஸ் பாதித்த இருவரில் ஒருவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தொற்று பாதித்த இருவருடனும் தொடர்பில் இருந்த 173 பேர் கண்டறியப்பட்டு, 12 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.