Also Watch
Read this
By: Web Team

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மான நோட்டீசை, இந்தியா கூட்டணி தலைவர்கள் முன்னிலையில், மக்களவை சபாநாயகரிடம் திமுக எம்பிக்கள் வழங்கினர். 120-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ள தீர்மான நோட்டீசை, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ், கவுரவ் கோகாய், தொல். திருமாவளவன், சு.வெங்கடேசன், துரை வைகோ உள்ளிட்டோரின் முன்னிலையில், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி, மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, கொறடா ஆ.ராசா ஆகியோர் இணைந்து வழங்கினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved